Tuesday, September 19, 2017

மனதில் தோன்றிய எண்ணங்கள் 46 TO 60

46. மனிதரில் பிரிவுகள் உணவு,வாழ்க்கை முறை, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. வேற்றுமையை மறந்து ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வது நல்லது.

47. சூரியன் கிழக்கே உதிக்கிறான் என்றால் கூட அதை மறுத்துப் பேச நாலு அறிவு ஜீவிகள் இருப்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது.

48. ஒருவர் தன்னுடைய கடமைகளைச் செய்து முடித்து, ஞானம் அடைந்து,கடவுளிடம் பக்தி செலுத்த வேண்டும்.ஆசைகளைத் துறக்காமல் இறைவனை அடைவது கஷ்டம்

49. நம் நாட்டுக்கு நல்லது செய்த, செய்கின்ற, செய்யப் போகின்றவர்கள் பலர். அது அவர்கள் வேலை. நாம் என்ன செய்வது என்று சிறிது யோசியுங்கள்.

50. நம்முடைய வாழ்க்கையை சரியாக வாழத் தெரியவேண்டும். பலன் இல்லாமல் பேசுவது, பயன் இல்லாத செயல்கள், அதைக் கெடுத்து நாசம் செய்து விடும்.

51. தத்துவங்கள் கேட்பதற்கு சுவையாக இருக்கும். பசித்தவனுக்குத்தான் பசியின் அருமை தெரியும். முதலில் பசியை போக்குவோம். தத்துவம் பிறகு.

52. நல்லதை நினைக்கும் போது.நல்லதை பார்க்கும் போது.நல்லதை கேட்கும் போது.நல்லதை பேசும் போது,நல்லதை செய்யும் போது, அது நமக்கு நல்ல நேரம்.

53. கடமைகளைச் செய்வது,பெற்றோரை சந்தோஷப் படுத்துவது,ஏழைகளுக்கு உதவுவது, இதையெல்லாம் செய்துவிட்டு பிறகு இறைவனை வேண்டுவது சாலச் சிறந்தது.

54. தினம் காலையில் ஒரு பத்து நிமிடங்கள் உங்கள் பெற்றோருக்காக ஒதுக்குங்கள். அவர்கள் தூக்கம், உணவு, ஆரோக்கியம் பற்றி அன்பாகப் பேசுங்கள். 

55. எங்கள் குடும்பம் ஒரு கார் [சிற்றுந்து] என்றால், மகள் என்ஜின், மகன் பெட்ரோல், மனைவி இயக்குநர், நான் ஓட்டுனர். வண்டி நன்றாக ஓடுகிறது.

56. பண்டைய முனிவரும், மகரிஷிகளும் உண்மையே பேசு, இனிமையாகப் பேசு, மனதிற்கு ரசிக்காத உண்மையைப் பேசாதே என்றனர்.நம்மால் பின்பற்ற முடியுமா?

57. அனைத்தும் சத்தியத்திலிருந்தே பிறந்து, உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கியமாகிறது. சத்யம் இல்லாத இடமே இப்பூவுலகில் இல்லை.

58. தனது சக்தி,தகுதி,தரம் அறிந்து அதன் படி நடக்கத் தெரிய வேண்டும்.அவை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.புலி புல்லைத் தின்னக் கூடாது

59. இளமையில் மனம் நட்பை நாடுகிறது. அது அதிக காலம் நீடிக்கிறது. முதுமையில் மனம்  தனிமையை நாடுகிறது.  நட்பு அதிக காலம் நீடிப்பதில்லை


60. தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள் அழகும் திறமையும் இருந்தும் சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை ஏன்?










Sunday, September 17, 2017

மனதில் தோன்றிய எண்ணங்கள் - 31 TO 45

31. மனம் ஒரு குரங்கு. அது தவறான வழிகளில் போகாமல் இருக்க, தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக்கொண்டு, நல்ல வழிகளில் செல்வது நல்லது.

32.மற்றவரைப் பாராட்டுவது ஒரு கலை.யாருக்கும் சுலபத்தில் வராது.ஏன் பாராட்ட வேண்டும் என்று தோன்றும். விடாதீர்கள். பலன் பின்னால் தெரியும்

33. இந்த 44 வருட திருமண வாழ்க்கையில், என் மனைவி குழந்தைகள் இல்லாமல், எந்த ஒரு கேளிக்கை நிகழ்ச்சிக்கும் நான் தனியாகச் சென்றது கிடையாது.

34. மகன் அப்பா ஆகும்போது, அப்பா தாத்தா ஆகி விடுவார். மகன் ஒருபோதும் உலக அறிவிலும், அனுபவத்திலும், ஞானத்திலும் அப்பாவை விஞ்ச முடியாது.

35. அரசியல், மதம் , ஜாதி, சினிமா, ஆரோக்கியம், பற்றி எழுத, விமர்சிக்க  நிறைய பேர் இருக்கின்றனர். நான் எழுதுவது வாழ்க்கையைப் பற்றி.

36. தாய், தந்தை, மனைவி, மக்கள்தான் உலகம் . அவர்களுக்காக உயிரைக் கொடு. அதில் தான் உண்மையான சந்தோஷம் இருக்கு. மற்றது எல்லாம் மாயை.

37. யக்ஞோபவீதம் [பூணூல்] நம் உடலை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. வலது பக்கம் உன்னதமான செயல்கள், இடது பக்கம் மற்ற காரியங்கள் செய்வதற்கு.

38. என்னை விட நீ பெரியவன் என்றால், நான் உன்னை விட மிகப் பெரியவன். நீ என்னை விடச் சிறியவன் என்றால் அடியேன்  உன்னை விட மிகச் சிறியவன் .

39. நண்பன் கடன் கேட்டான். என் தந்தை கூறினார். பணம் முக்கியம் என்றால்  நண்பனை மறந்து விடு. நண்பன் முக்கியம் என்றால் பணத்தை மறந்துவிடு.

40. ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், ஒருவர் தன்னுடைய நிதி நிலை முன்னேற்றத்தைக்  கணக்கு இடுதல் மிக அவசியம் . அதுவே அவர் வளர்ச்சியைக் காட்டும்.

41. ரூ 50ல் வாழ்க்கையை ஆரம்பித்து 52 வருடங்கள் ஓடிவிட்டன. கடமை, குடும்பம், சிக்கனம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இதுவே என் தாரக மந்திரம்.

42. சினிமா மோகம், அரசியல் ஆதரவு, மதச் சார்பு, ஜாதி உணர்வு, இவைகளை நாம் அறவே தவிர்த்தால் நமது நாடும், மக்களும் முன்னேறும் வாய்ப்புண்டு.

43. அட, தினம் காலையும் மாலையும் இறைவனிடம் சில  நிமிடங்கள் பிரார்த்தனை, சின்ன ஸ்லோகம், 12 தோப்புக்கரணம், இது கூட நம்மால் செய்யமுடியாதா?

44. வாழ்க்கையில் முன்னேற, சிறந்த அறிவு, பண்பாடு , ஞானம், நல்ல குணம்  உள்ள ஒருவரை வழி காட்டியாக ஏற்று அவர் சொற்படி  நடக்க வேண்டும்.


45. ஏழைத் தொழிலாளிகள், வேலைக்காரர்கள், சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவது மனிதாபிமானம் அல்ல. மேலே போட்டுக் கொடுப்பது [டிப்ஸ்] உத்தமம்.







Saturday, September 16, 2017

மனதில் தோன்றிய எண்ணங்கள் 16 TO 30

16. நமது வாழ்க்கையில் கல்வி அறிவையும், அனுபவம் பண்பாட்டையும், வயது ஞானத்தையும், மனோபாவம் குணத்தையும் நமக்குப் பரிசாகத் தருகின்றன.

17. ஒரு மாணவன் கல்வியில் வெற்றி பெற முக்கியக் காரணங்கள் படிப்பில் ஆர்வம், வகுப்பில் கவனம், விடாமுயற்சி, வெற்றி அடைய வெறி இவைகள் தான்.

18. ஒரு மாணவன் பாடங்களைப் புரியாமல்  மனப்பாடம் செய்து  95% மதிப்பெண் பெறுவதை விட,  புரிந்து கொண்டு 80% மதிப்பெண் பெறுவது சிறந்தது.

19. சிரிப்பு பலர் விரும்பும் இனிப்பு, வெறுப்பு பலர் தவிர்க்கும்  புளிப்பு, அஹங்காரம் பலர் வெறுக்கும் கசப்பு, கோபம் பலர் அடையும் காரம்.

20. சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம், சம்பாதிப்பதில் கொஞ்சமாவது ஏழைகளுக்குத் தானம் செய்யும் நேரம் சுபமுகூர்த்தம் ஆகும்.

21. செப்டம்பர்  24ல் இருந்து ஆக்டோபர் 8 வரை  மஹாளய பக்ஷம். தகப்பனார் இல்லாதவர்கள் அவரையும் மற்ற பித்ருக்களையும் தினமும் வணங்க வேண்டும் .

22. குடும்பம் ஒரு கோயில் என்கிறோம். திருமணத்திற்குப் படிப்பு, அழகு, பணம், குணம், மனப் பொருத்தம் இவற்றில் மனப் பொருத்தம் மிக முக்கியம்.

23. நம் நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு அரசியல்,சினிமாவில் உள்ள ஆர்வம் பொருளாதாரத்தில் இல்லை. அவர்களின் அறியாமை, ஆர்வமின்மை காரணம்

24. இந்திய பொருளாதாரம் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் சிலரே. அனைவரும் எல்லா  விஷயங்களையும் சந்தேகமின்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

25. இந்தியா முன்னேற ஏழ்மை, அறியாமை, லஞ்சம், ஊழல், சினிமா மோகம், கட்சி அரசியல், வரி ஏய்ப்பு, மது அருந்துதல் ஆகியவை தடையாக இருக்கின்றன.

26. ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மருமகள், மகள், மருமகன் இவர்களிடையே உறவு நன்றாக இருந்தால் அது ஒரு சொர்க்கம்.அன்பு தான் ஒரே வழி

27. மண்ணின் தரம் விளைச்சல், மாவின் தரம் பணியாரம், மனதின் தரம் எண்ணங்கள், வாழ்வின் தரம் வாழும் முறை, குழந்தைகளின் தரம் குணம். சரிதானே?

28. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு. யார் எது சொன்னாலும் மறுத்துப் பேசும் குணம் எப்படி ஒருவருக்கு வருகிறது.அதைத் தவிர்க்க முடியாதா?

29. ஒரு பிரச்சனையில் நெருங்கியவருடன் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறந்தது.நீங்களாகவே முடிவு எடுப்பது அவ்வளவு நல்லதல்ல

30. மரம் நிலைத்து நிற்க வேர் முக்கியம். மூத்த குடி மக்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். அவர்கள் சந்தோஷமாக, நலமாக வாழ வழி செய்ய வேண்டும.






Sunday, September 10, 2017

WHO IS A GURU ?

The Advayataraka Upanishad states that the true teacher is a master in the field of knowledge, well-versed in the Vedas, is free from envy, knows yoga, lives a simple life that of a yogi, has realized the knowledge of the Atman (Soul, Self). 

Some scriptures and gurus have warned against false teachers, and have recommended that the spiritual seeker test the guru before accepting him. 

Swami Vivekananda said that there are many incompetent gurus and that a true guru should understand the spirit of the scriptures, have a pure character and be free from sin, and should be selfless, without desire for money and fame. 

According to the Indologist Georg Feuerstein, in some traditions of Hinduism, when one reaches the state of Self-knowledge, one's own soul becomes the guru. A true guru is, one who lives the simple virtuous life he preaches, is stable and firm in his knowledge, master yogi with the knowledge of Self (soul) and Brahman.

It is true that one has to learn from the Guru. In earlier days, the gurus were simple, pious, well informed, unassuming, and student-oriented. The present-day gurus are different, with pride and fanfare, money minded and undependable. So the people have to learn on their own.

Arjuna learned archery from his Guru Drona. But Ekalaiva was denied the opportunity to learn from him due to his status. So he learned the art by himself by keeping a replica of Guru Drona. He was found to be far better than Arjuna in Archery. 

To protect Arjuna, Drona asked Ekalaiva to give his right-hand thumb as Guru dhashina so that he could never compete with Arjuna. Without any hesitation, Ekalaiva immediately obliged his Guru by cutting off his thumb. Who is great? Whether the Guru or Sishya?


WHO IS TO KILL THE TIGER ? / புலியை கொல்லுவது யார்?

WHO IS TO KILL THE TIGER?
There was a considerable difference in the conducting of the elections prior to 1970 and thereafter. Before 1970, people who contested the election under various political parties did not spend much on propaganda, the ting of notices, etc. and other expenses. Even if they had lost the elections they did not care much as the political parties bore the expenses.

After 1970, the contestants started spending more money under various heads over and above the money allotted to them by the party. It was in various forms of freebies to the people and slowly the expenses reached sky-high which compelled the Election Commission to fix the ceiling on expenses.


At that time, cancer called Black Money entered into the system. To recover the money spent on elections, the candidates who won the elections collected bribes on every work to be done by the Govt. The people also accepted freebies before the elections and paid bribes after the elections. 


Who is responsible for the birth of black money, cancer, in our society. After having contributed for the emergence of black money, the same people are now crying for the eradication of it. How it can be done ?. Can anyone make the contestants not to pay freebies during elections or make the people not to accept them ?.


If it is successful then there will be no demand for bribe after the elections and people will not pay them. But the tiger has tasted the human blood and it cannot be stopped unless it is killed. The people have to decide how to kill the tiger. It is high time that people should make a decision on this major problem facing the country. It is in their hands. 


புலியை கொல்லுவது  யார்?

இப்பொழுது தேர்தல் நடத்தும் முறைக்கும் 1970 க்கு முன் நடத்திய தேர்தலுக்கும் நிறைய  வித்யாசங்கள்  இருக்கிறது. 1970 க்கு முன் தேர்தலில் போட்டி இட்டவர்கள் கட்சிகள் கொடுத்த பணத்திற்குள் எல்லா செலவுகளையும் செய்தார்கள். 

பிரச்சாரம் செய்வது, நோடீஸ் ஓட்டுவது போன்ற எல்லா செலவுகளும் அதற்குள் அடங்கி விடும். தேர்தலில் தோற்றாலும்  அவர்கள் செலவு வகையறாக்களை பற்றி அதிகம் கவலை படுவது  இல்லை. அவர்கள் கட்சி எல்லா பணத்தையும்  ஏற்றுக்கொள்வதால் அது பெரிய பிரச்சனையாக  தெரியவில்லை.

1970 க்கு பிறகு தேர்தலில் போட்டி இட்டவர்கள் கட்சி கொடுத்த பணத்திர்க்கு மேல் அதிக செலவுகள் செய்தனர். மக்களுக்கு  பல விதத்தில் பணம் மற்றும் பொருள்களை இநாமாக கொடுத்து அவர்களை தங்களுக்கு ஒட்டு போடும் படி  கேட்டுக் கொண்டனர். இதனால் தேர்தல் செலவுகள் அதிகம் ஆகி  ஆகாயத்தை தொட்டது. 

இதனால் தேர்தல் கமிஷன்  அதிக  செலவை கட்டுப்  படுத்த சட்டங்கள் இயற்றி அதற்கு ஒரு வரைமுறை ஏற்படுத்தியது. அப்பொழுதுதான் லஞ்சம்  என்ற புற்று நோய் நமது  நாட்டில் முதல் முறையாக பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, பூதாகாரமாக  உருவெடுத்து நின்றது. 

தேர்தலில் செய்த செலவை திரும்பி பெற பலவிதங்களில்  லஞ்சம் வாங்கப்பட்டது. அரசாங்க வேலைகளில் கமிஷன் வாங்குவதும்  கொடுப்பதும் சகஜமாகி விட்டது. மக்களும் அதற்கு தகுந்தால்  போல் பணம் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொண்டனர். 

இப்பொழுது கூறுங்கள். நமது நாட்டில் கருப்பு பணம் என்ற புற்று நோய் உருவாக யார் காரணம்? கருப்பு பணம் பிறக்க வழி செய்த அதே மக்கள் இப்பொழுது அதை அழிக்க வேண்டும் என்று கதருகின்றனர். 

அதை எவ்வாறு செய்வது? வளர்த்து  விட்ட புலியை  எப்படி கொல்வது? யார் கொல்வது? தேர்தலில் போட்டி இடுபவர்களை  யார் பணம் கொடுக்கக்  கூடாது என்று கூறுவது?. பணம் வாங்குபவர்களை வாங்க கூடாது என்று யார் சொல்வது? யார் கேட்பது?

இது வெற்றி அடைந்தால் நாட்டில் லஞ்சம் என்னும் புலி அழிந்து விடும். ரத்தத்தை  குடித்து ருசி கண்ட புலி அதை விடுமா? அதை கொல்ல வழி என்ன? எல்லா மக்களும் தீவீரமாக யோசிக்க வேண்டிய நேரம் இது. நாடு இன்னும் மோசமாக ஆவதற்குள்  நாம் அவசரமாக முடிவு எடுக்க வேண்டும். ஜெய்  ஹிந்த்.



Wednesday, September 6, 2017

KNOWLEDGE

KNOWLEDGE ABOUT INDIAN ECONOMY.

Due to lack of education, most people are not interested to know about the Indian Economy. They do not have as much interest as they have in politics and cinema. They learn by hearsay or from media which may or may not be correct. The following Govt. web sites give a clear picture. But it is difficult to understand. Web sites 4, 6 and 7 may be useful.

1. Ministry of Finance, Government of India
2. Department of Commerce, Government of India
3. Department of Industrial Policy & Promotion
4. Office of the Economic Adviser
5. Investment and Trade in India
6. Union Budget and Economic Survey
7. Reserve Bank of India's database on the Indian economy

KNOWLEDGE ABOUT  LANGUAGE

I find people constrict English words so as to send SMS or WhatsApp messages on a cell phone since the available space is less. But in FaceBook there is sufficient space. Recently I read a posting on FaceBook as given below. 

"It's very sad to c a girl like Anitha who has a bright future committing suicide.. Wat can v do now.. Nuthing. Other than a putting a status? Is tat it.. Nope.. V hav 2 change it frm d roots.. If d same thing happened wit our family r neighbors. Wil u let it happen. V wud fight 4 it.. Each nd every person shud join nd fight 4 wha is right. D same was conveyed in d movie PURIYATHA PUTHIR.. Even celebs like kamal hasan sir told d same in his interview. Let's bring d change"

In early days, Germany was considering to adopt this " constricted " English as for publishing and for official language. But saner elements prevailed upon the ministry to avoid such adoption. I request all my friends to introspect what will happen if:

1. Kids are taught English like this in school?
2. How people will read if newspapers print like this?
3. Will people write like this in their office?
4. Why spoil the beauty of a language for convenience?
5. Have sympathy for others who find it difficult to read it?

நம் நாடு முன்னேற என்ன வழி ?


1. நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன், நான் நாட்டிற்கு என்ன செய்தேன் என்று கேட்க வேண்டும்.

2. மக்களால் மக்களுக்காக தேர்ந்து எடுக்கப் பட்டது அரசாங்கம். குறை யாரிடம்? பிறரைக் குற்றம் கூறுவதற்கு முன்னால் தன்னைப் பற்றி நினைப்பது நல்லது.

3. உங்கள் ஒட்டு தான் நாட்டின் விதியைத் தீர்மானிக்கப் போகிறது. நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள். பின்னர் வருந்துவதில் அர்த்தமில்லை.

4. நன்கு படித்த, நேர்மையான, பண்புள்ள, அனுபவப்பட்ட புத்திசாலிகள், அதிகாரத்தில் இருந்தால் தான் நாடும் மக்களும் நல்வழியில் செல்வார்கள்.

5. நாம் பேசுவதில் வல்லவர்கள். அதில் மயங்குவதிலும் வல்லவர்கள். தேர்தலில் வேட்பாளர் பேச்சில் மயங்காதீர்கள். அவர் வாழ்க்கைத் தரத்தை பாருங்கள்

6. உண்மையிலேயே நீங்கள் நாடு முன்னேற வேண்டும் என்று விரும்பினால் கட்சி சார்பாக ஓட்டுப் போடக் கூடாது. வேட்பாளர் நேர்மை, திறமை முக்கியம்

7. ஒரு கட்சியின் தலைவரைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. அவருக்குக் கீழே இருப்பவர்கள் தரும் நெருக்கடி அவர் எடுக்கும் முடிவுகளுக்கு காரணம்.

8. தேர்தலில் நல்லவர்களும், கெட்டவர்களும் வேட்பாளராக நிற்கிறார்கள். கெட்டவர்களுக்கு ஒட்டுப் போடாதீர்கள். உங்களுக்கு ஏன் அந்த வீண் பாவம்

9. தேன் எடுத்தவன் புறம் கையை நக்காமல் இருக்கமாட்டான். தேர்தலில் சொந்தப் பணத்தை செலவு செய்தவன் அதை மீட்காமல் விட மாட்டான்.

10. ஒட்டுப் போடுவதற்கு பணம் கொடுப்பது சரியா அல்லது பணம் கொடுத்தவனுக்கு ஒட்டுப் போடுவது சரியா. இது நம் நாட்டில் தீர்க்க முடியாத பிரச்சனை

11. ஒரு வேட்பாளர் ஒட்டு போடுவதற்குப் பணம் கொடுத்தால் அவர் நல்லவர் இல்லை. வெற்றிக்குப் பின் உங்களிடம் இருந்தே பல மடங்கு பணம் வாங்கி விடுவார்

12. ஒரு வேட்பாளர் ரூ100 செலவு செய்தால் ரூ50 கணக்குக் காட்டுவார். மீதி கருப்பு பணம். தேர்தலுக்குப் பின் அதை விடப் பல மடங்கு வாங்கி விடுவார்.

13. மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும். வரிகளை சரியாக கட்ட வேண்டும். லஞ்சம்,ஊழலுக்கு எப்பவும் ஆதரவு தரக்கூடாது. சட்டத்தை மதிக்க வேண்டும். சிக்கனமாக வாழணும். 

14. பெண்கள் ஆபரணங்களை விலக்கணும். வெளி நாட்டுப் பொருள்களை தவிர்க்கணும். வன்முறையை ஒழிக்கணும்.. பெண்களை மதிக்கணும், பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும். 


முடியுமா உங்களால்?


Sunday, September 3, 2017

மனதில் தோன்றிய எண்ணங்கள் - 1 TO 15

1. ஸுக்லாம் பரதரம் விஷ்ணும், சசி வர்ணம் ஸதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயெத் சர்வ விக்ந உபஸாந்தையெ.

2. அச்சுதாய  நமஹ, அநந்தாய நமஹ ., கோவிந்தா ய  நமஹ.

3. கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச,பத்மநாப, தாமோதர.

4. காயத்ரி மந்த்ரம் : ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத் 
Gayathri mantra : Om Bhoor bhuwah swah, tat savitur varenyam Bhargo devasya dheemahi, Dhiyo yo nah pra-chodayaat 

5. ஓம்  விஷ்ணவே நமஹ , ஓம்  ஷிவாயை நமஹ , ஓம் லப்த காமாயை நமஹ .

6. இந்த மந்திர ரத்தினத்தை தினமும் அதிகாலையில் 54 முறை தவறாமல் ஜபிக்கவும்.
"ஸ்ரீமன் நாராயண ஸரனொவ் ஸரநம் ப்ரபத்யெ ஸ்ரீமதே நாராயணாய நமஹ"

7. “ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே” [ஹிந்துக்கள் பத்து முறை தியானம் செய்யலாம்]

8. ஓம் நமோ ப்ரம்ஹநெ, நமோ அஸ்துஅக்நயெ, நம ப்ரிதிவ்யை, நம ஔஶதீப்யஹ, நமோ வாசே, நமோ வாசஸ்ப்பதயெ, நமோ விஷ்ணவே, பிரகதே கரோமி. [மூன்று முறை தியானம் செய்யவும்]
Om namo brahmane  namo astvagnaye  namah prthivyai nama oshadhiibhyah / namo vaache namo vaachaspataye namo visnave brhate karomi 

9. பரித்ராணாய ஸாதூநாம், விநாஷாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய, ஸம்பவாமி யுகே யுகே ||

பகவான் கிருஷ்ணன்: நல்லவர்களைக் காக்கவும், கெட்டவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் அவ்வப்போது இவ்வுலகில் அவதரிக்கிறேன்

10. ஏககாலே படேன்னித்யம் மஹாபாப வினாஶனம் | த்விகாலம் யஃ படேன்னித்யம் தன தான்ய ஸமன்விதஃ || த்ரிகாலம் யஃ படேன்னித்யம் மஹாஶத்ரு வினாஶனம் |

11. ஓம் நமசிவாய நமஹ. ஓம் நமோ நாராயணாய நமஹ. ஶ்ரீ ராம ஜெயம். ஓம் சக்தி பராசக்தி. ஜெய் ஆஞ்சநேயா. ஶ்ரீ ராகவேந்திராய. ஓம் சாயி ஜெய் சாயி.

12. ஹரே ராம ஹரே ராம, 
ராம ராம ஹர ஹரே,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, 
கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹரே.

13. ரகுபதி ராகவ ராஜா ராம், பதித பாவன சீதா ராம்
ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்.
ரகுபதி ராகவா ராஜா ராம், படித்த பவன சீதா ராம்
ராமா ராமா ஜய ராஜா ராம், ராமா ராமா ஜய சீதா ராம்

14, "கடன் பட்டார் நெஞ்சம் போல"என்பது முதுமொழி.இப்பொழுது எங்கும் கடன், எதிலும் கடன். கொடுக்கல் வாங்கல் செய்யாமல் ஒருவரால் வாழ முடியாதா?

15. 21 வயதில் நமக்கு கட்டாய ராணுவப் பயிற்சி தேவை. ஊர் சுற்றுவது, சினிமா பார்ப்பது, மது அருந்துவது, வம்பு இழுப்பது, இவை அடியோடு மறையும்























A JEWEL IN THE CROWN

A crown looks beautiful when a prominent jewel is embedded on its top. I think among the crowns world over, the Lord's crown at Thirupathi Hills is the most expensive and beautiful one. Similarly, there are people in the world who are considered to be  Jewels in their respective fields for their performance and character. 


In my family, I am proud to say that my daughter-in-law Ms.Anu is a jewel for the following reasons. She is slim, wheatish, and beautiful. She is a commerce graduate with PGDCA and DCFA in computer applications. Prior to her marriage, She had worked as a manager in a hospital and knows the basics of medicine. Now she runs a boutique shop. She has many wonderful qualities of which we are proud of.


1. She is always cheerful, patient, and never argued.

2.  She keeps her ears open but keeps her mouth shut.

3. She loves her husband and daughter to the core and caters to all their requirements.

4. She takes care of her in-laws and attends to their needs on time.

5. She is modern, friendly, easy-going, and handles family finance judiciously.

6. She is interested in kitchen work and she is a good cook.

7. She keeps the house neat and tidy. 

8. She manages both her professional work and domestic needs efficiently.

9.  She is religious and attends to daily pujas and on special days.

10.  She does not long to go to her parents, nor talk in high esteem about them.


MAY GOD BLESS HER WITH LONG LIFE, HAPPINESS, AND PEACE.













EDUCATION

1. Education comes under the concurrent list. That is, school education policies and programs are suggested by the GOI though the state governments have freedom in implementing them.

2. Policies are announced at the national level periodically. The Central Advisory Board of Education (CABE), set up in 1935,  plays a lead role in the policies and programs.

3. National Council for Educational Research and Training (NCERT) prepares a National Curriculum Framework. 


4. State Council for Educational Research and Training (SCERT) proposes educational strategies, curricula, pedagogical schemes and evaluation method to the states'Departments of Education. 


5. The SCERTs generally follows guidelines by the NCERT. But the states have considerable freedom in implementing the education system. This is followed by the entire country.


6. The entrance exam for IIT and EEEC for engg and IIM for management courses are conducted at the national level without any objection or opposition. 


7. Anna University was once famous for a high standard. After all the Engg colleges were brought under Anna University the standard has gone down. 


8. There are two ways of learning by a student. 1. to understand the subject and write the exam on own knowledge. 2. without understanding the subject and to write the exam by mugging up. 


9. Students who studied well, understanding the subjects scored good marks got into better prospects. A few took up teaching and are working in high ranking private schools as teachers. 


10. Students who studied under good teachers in good private schools understood the subjects and scored good marks and got into high ranking professional courses with better prospects. 


11. Earlier the eligibility mark for Engg entrance exam was 70% average in Maths, Physics and Chemistry. This was brought down to 60 then to 40 and later the exam itself was scrapped. 


12. Students who got good marks by mugging up without understanding the subjects entered professional courses without entrance exam or 3-year degree and got reasonably good jobs. 


13. Students who got average marks by mugging up without understanding the subjects and in regional language took up teachers training and are now working as teachers. 

14. They work in almost all govt schools and low standard private schools. They impart poor standards in teaching resulting in a disparity between private and govt schools.


15. Others are suffering. Some drastic steps are to be taken with IRON HAND  to fine-tune the curriculum, to replace the inefficient teachers and to motivate the mugging up students.

16. Students who got low marks by mugging up without understanding the subjects and in Tamil medium are idle and jobless and wasting their life.


17. In Tamil Nadu, State Board Govt school syllabus is made easy. Rural students who study in regional language and pass by mugging up find it difficult to compete on all India level.  


18. There is no opposition or objection or agitation in any of the non Hindi speaking states in implementing the guidelines of Central Govt. Tamil Nadu is the only state to oppose. 

A BITTER PILL TO SWALLOW

I was conservative over the years. I am now realizing the reality. When we lived independently, we were the masters of our family. Once we decided to join the children, there should be a sea change in our attitude so that we lead a happy life. We must know how to swim with the tide. We should go along with our children.

The rules, regulations, rituals, manners, etiquette, discipline etc followed in olden days are no longer relevant now. The main aspect is love and love alone that matters. For eg. a son sitting before a father with his legs crossed was considered to be disrespectful in those days. Now it is not so. If a father finds fault with him then he will only be unhappy.


Most of the parents expect their children to take care of them as they took care of them for 25 years. True. But if that point is to be accepted, we should also behave in the same way as they behaved when they were children. Also remember, when they were children, we punished them for any wrongdoings. Who will punish us for our mistakes when we are with them now.


The main aspect that leads to our unhappiness is expectations. We have preconceived notions that our children should behave or act in the way we expect them. If they do not behave as we expect, then we are unhappy. If we refrain from expecting anything from anybody, life will be enjoyable. Giving too much importance to parenthood is of no avail.


The first aspect that should matter to the old people is to see whether their children really love them wholeheartedly. The next aspect is to see whether they have good character free from all vices. A husband and wife are independent and are inseparable. We should realize that even the parents are less important before a wife or husband.


We must mentally lead an independent life even though we are with our children. We have joined them because we are physically incapable of living independently. In that case, we must only surrender and should not fight. If not, our condition will become worse and no one will be ready to take care of us. Love them unconditionally and we will definitely be happy.

ON A PAY DAY

Payday is a special day for everyone. You may have sufficient money, even then, payday is a pleasure. It will be a paradise when it falls on a Friday followed by the weekend. The husband and wife start planning on Friday itself about their program for the next two days. They may go for a picnic or movie or visit friends or relatives etc. You get a thrill in it.

My son was no exception. On a payday, a Friday, he also started planning similarly with our daughter-in-law. She told him to discuss the matter with his mother. When he asked his mother whether he could book tickets for the Tamil movie VIVEKAM, she rejected it saying that the review for the movie was not good.


I entered the scene unauthorized. When I inquired what was happening, my wife told me about the discussions. I think from the viewpoint of others. Though old, I was still young at heart. I remembered the opportunities I missed when I was young. I could not enjoy due to financial constraints and that my father did not like to go for movies.


We get our children married only to enjoy life and not to sacrifice everything for the sake of the parents. I was sure that my son and DIL would not go for the movie leaving us at home. I told my son that it was long since I saw an Ajit movie, and asked him to go ahead booking tickets for all of us on Saturday or Sunday.


You must be present at the scene, physically, to see the happiness in the faces of my son and DIL and the smile they exchanged between them. In no time, my son booked the tickets online for Sunday morning show since in Hyderabad we have only one show for Tamil movies.





NO SHAME IN ASKING

I do not know why my father was so averse to the word ASKING. When I was a boy, if I ASKED my mother to serve me more vegetables, he used to chide me saying that ASKING was the worst habit. He said if vegetables were available, the mother would serve on her own. Afterward, he explained to me that I would only be disappointed if I was refused.

Later, when I was running my family after marriage, one day, he scolded me in uncertain terms to ASK for the newspaper from my neighbour as I was not buying. He said it was a shame to ASK anything from anyone. Your palm should always face downwards [giving] but not upwards [receiving].


Due to his influence on me, I also became averse to ASKING. That was the reason why I never took any hand loan from anyone in my life. Even from my wife, I never ASKED for anything whether it was food or biscuits or snacks or even a towel I missed to take to the bathroom. Even when I was hungry, I used to wait patiently for her to call me for dinner.


This was the practice until last year when we came to join my son's family. My wife has told my DIL about my nature in not ASKING for anything. So she used to come in person to call me for dinner or breakfast or to give biscuits, snacks etc at the appropriate time. However, when she is busy attending to the needs of my son or her daughter it may get delayed.


I used to be in a dilemma on such occasions. Sometimes she used to come rushing down to give me the items. I could understand that she is busy and that my wife has become old. She is like a daughter to me and there is no shame in ASKING her what I need. So I dropped my ego and started ASKING her even before she came forward to give me.

குரு தக்ஷிணை PART 4 of 4

Continued from part 3 of 4

ஏகலவ்யன் துரோணரைக் கண்டு, சில எட்டுகள் முன் வந்து, அவரது பாதத்தைத் தொட்டு, நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்தான். இப்படி துரோணரை வணங்கிய நிஷாத மன்னனின் மைந்தன், தன்னை அவரது சீடனாகத் தெரிவித்து, மரியாதையாகக் கரங்குவித்து அவர் முன் நின்றான். 


பிறகு துரோணர், ஏகலவ்யனிடம், "ஓ வீரனே, நீ எனது சீடனாக இருப்பின், எனக்குரிய கூலியைக் {தட்சணையைக்} கொடு" என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்ட ஏகலவ்யன் மிகவும் திருப்திகொண்டு, "ஓ குருவே, நான் உமக்கு என்ன தரட்டும்? எனக்கு கட்டளையிடுங்கள். 


வேதமறிந்த அனைத்து மனிதர்களைக் காட்டிலும் முதன்மையானவரே, எனது குருவுக்கு நான் தரமாட்டேன் என்று சொல்வதற்கு உலகில் எந்தப் பொருளும் இல்லை." என்றான். அதற்கு துரோணர், "ஓ ஏகலவ்யா, உண்மையில் எனக்கு பரிசு கொடுக்கும் நோக்கம் உனக்கு இருக்குமானால், உனது வலக்கைக் கட்டை விரலை நான் உன்னிடம் வேண்டுகிறேன்." என்றார்.


 "உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, தான் கொண்ட உறுதியை காக்க விரும்பிய ஏகலவ்யன், கூலியாகக் கட்டைவிரலைக் கேட்ட துரோணரின் கொடும் வார்த்தைகளைக் கேட்டும் கூட, மகிழ்ந்த முகத்துடன், இதயம் பாதிக்காமல், ஆரவாரமில்லாமல் தனது கட்டைவிரலை வெட்டியெடுத்து, துரோணரிடம் கொடுத்தான்.


அதன்பிறகு, மீதம் இருந்த விரல்களுடன் கணையடித்த அந்த நிஷாத இளவரசன்,  தனது லாவகம் கெட்டிருந்ததை அறிந்தான். இதனால் அர்ஜூனன், அவனிடம் இருந்த பொறாமை எனும் நோய் அகன்று மகிழ்ச்சியடைந்தான்.                   


Abridged from  முழு மஹாபாரதம்        CONCLUDED

குரு தக்ஷிணை PART 3 of 4

Continuation from part 2 of 4

வில்லிலிருந்து நிறுத்தாமல் தொடர்ச்சியாகக் கணைகளைச் சரமாக அடித்துக் கொண்டிருந்த ஏகலவ்யனைக் கண்டனர். அந்தக் கடும் முகம் கொண்டவனிடம், "நீ யார்? யாருடைய மகன் நீ?" என்று கேட்டனர். 


இப்படிக் கேட்கப்பட்ட அம்மனிதன், "வீரர்களே, நான் நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மைந்தன்.ஆயுதக் கலையில் நிபுணத்துவம் பெற்ற ஆசான் துரோணரின் மாணக்கனாக என்னை அறிந்து கொள்ளுங்கள்." என்றான்.


"அதன்பிறகு, அந்த நிஷாதன் தொடர்பாக அனைத்தையும் அறிந்து கொண்ட பாண்டவர்கள், நகரத்திற்குத் திரும்பி, துரோணரிடம் சென்று, கானகத்தில் அவர்கள் கண்ட அதிசயமான வில்வித்தைச் சாதனையைப் பற்றி அவரிடம் சொன்னார்கள். 


குறிப்பாக அர்ஜூனன், அவ்வளவு நேரமும் ஏகலவ்யனைச் சிந்தனை செய்து கொண்டு, பிறகு துரோணரைத் தனிமையில் சந்தித்து, தனது குரு தன் மீது வைத்திருக்கும் அன்பில் நம்பிக்கை கொண்டு, "நீர் என்னை அன்புடன் உமது மார்போடு அணைத்து, எனக்குச் சமமாக உமது மாணவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னீர்.


இப்போது உமது மாணவனான நிஷாத மன்னனின் மைந்தன் என்னைவிடச் மேம்பட்டவனாக இருப்பது எவ்வாறு?" என்று கேட்டான்."இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணர் சிறிது நேரம் சிந்தித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து, அர்ஜூனனை அழைத்துக் கொண்டு நிஷாத இளவரசனிடம் சென்றார். 


அங்கே, உடலெங்கும் அழுக்கு பூசி, தலையில் குடுமியுடன், கந்தலாடையுடன், கையில் வில்லேந்தி, தொடர்ச்சியாக சரம்போல கணையடித்துக் கொண்டிருக்கும் ஏகலவ்யனைக் கண்டார். 


Abridged from  முழு மஹாபாரதம்  

to be continued in part  4 of 4

குரு தக்ஷிணை PART 2 of 4

Continuation from part 1 of 4

அவரது நிபுணத்துவத்தைக் கேள்விப்பட்ட பல நாட்டு மன்னர்களும் இளவரசர்களும், துரோணரிடம் ஆயிரக்கணக்கில் வந்து குழுமினர். அப்படி வந்தவர்களில், ஏகலவ்யன் என்ற இளவரசனும் இருந்தான். அவன் நிஷாதர்களின் மன்னன் ஹிரண்யதனுசின் மகனாவான். 


இருப்பினும், தர்ம நீதிகள் அனைத்தையும் அறிந்த துரோணர், தனது உயர்குடி மாணவர்களை விட இந்த நிஷாதனானவன், திறமையில் விஞ்சிவிடப்போகிறான் என்று எண்ணி, அவனை மாணவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. 


ஆனால் அந்த நிஷாத இளவரசன், துரோணரின் பாதத்தைத் தனது தலையால் தொட்டு வணங்கி, வந்த வழியே கானகத்திற்குள் சென்றான். அங்கே களிமண்ணால் துரோணர் உருவத்தைப் பதுமை செய்து, அதை உண்மையான குருவாக ஏற்று வணங்கி, அப்பதுமைக்கு முன் தினசரி ஆயுதப் பயிற்சிகளைச் செய்து வந்தான். 


தனது குருவின் மேல் வைத்திருந்த அளவற்ற மதிப்பினாலும், விற்பயிற்சியில் அவன் கொண்டிருந்த அர்ப்பணிப்பினாலும், அவனுக்கு, நாணில் கணை பொருத்துவது, இலக்கு நோக்குவது, விடுப்பது ஆகிய மூன்றும் மிக எளிதானது. ஒரு நாள், கானகத்திற்கு வந்த அவர்கள், தங்கள் வேட்டையைத் தேடி உலவிக் கொண்டிருந்தனர். 


அதே வேளையில், கூட வந்த நாயும் தனியாக கானகத்தில் உலவி, நிஷாத இளவரசன் (ஏகலவ்யன்) இருக்குமிடத்திற்கு வந்தது. கறுப்பு உடையுடனும், உச்சந்தலையில் குடுமியுடனும், அழுக்கேறிய உடலுடனும் கறுத்த நிறத்துடனும் இருந்த நிஷாதனைக் கண்ட அந்த நாய், சத்தமாகக் குரைத்தது.


அதனால் அந்த நிஷாத இளவரசன், நாய் வாயை மூடும் முன்பே, அதன் வாய்க்குள் ஏழு கணைகளை அடித்தான். ஏழு கணைகளால் துளைக்கப்பட்ட அந்நாய், பாண்டவர்களிடம் திரும்ப வந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த வீரர்கள், ஆச்சரியத்தில் மூழ்கினர். 


தங்கள் திறனில் வெட்கமடைந்து, அவர்கள் அறியாத மனிதனின் லாவகம் கொண்ட கரத்தையும், செவித்திறன் கொண்டு தவறாது குறியைச் சரியாக அடிக்கும் திறனையும் புகழ ஆரம்பித்தனர். பிறகு, அந்தக் கானகவாசியைத் தேடிச் சென்றனர்.  


Abridged from முழு மஹாபாரதம்  

to be continued in part 3 of 4

குரு தக்ஷிணை PART 1 of 4

வைசம்பாயனர் சொன்னார், 

பீஷ்மர் விரும்பிய படி, வில்லாளிகளில் சிறந்த துரோணர் மகிழ்ச்சியுடன் பாண்டு மற்றும் திருதராஷ்டிரனின் மைந்தர்களை தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார். ஒரு நாள் அவர்களைக் கூப்பிட்டு, தனது காலில் விழுந்து வணங்க வைத்து, கனத்த இதயத்துடன், 


"நான் எனது இதயத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை வைத்திருக்கிறேன்நீங்கள் ஆயுதங்களில் நிபுணத்துவம் பெற்றதும், அந்த காரியத்தை நிறைவேற்றித் தருவதாக எனக்கு உண்மையுடன் உறுதி கூறுங்கள்." என்று சொன்னார்.


 "இந்த வார்த்தைகளைக் கேட்ட  அர்ஜூனன், அந்தக் காரியம் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றித் தருவதாக சத்தியம் செய்தான். மகிழ்ச்சியடைந்த துரோணர் அர்ஜூனனை மார்புறத் தழுவி, ஆனந்த கண்ணீர் விட்டார். 


பிறகு  துரோணர், பாண்டுவின் மகன்களுக்கு தெய்வீக மற்றும் மனித ஆயுதங்களில் பயிற்சி கொடுத்தார். ஆயுத அறிவியலில் தனக்கிருக்கும் அர்ப்பணிப்பாலும், நிபுணத்துவத்தாலும், கரங்களின் பலத்தாலும், விடாமுயற்சியாலும் எப்போதும் குருவின் அருகே இருந்து, அனைவரைக் காட்டிலும்  அர்ஜூனன் மேம்பட்டு இருந்தான். 


குரு எடுக்கும் பாடம் எல்லோருக்கும் ஒன்றாக இருப்பினும், அர்ஜூனன், தனது கரங்களின் லாவகத்தாலும், நிபுணத்துவத்தாலும் சக மாணாக்கரில் முதன்மையானவனாகத் திகழ்ந்தான்.பழக்கவழக்கத்தின் {HABIT} சக்தியை உணர்ந்த  பாண்டு மைந்தன் {அர்ஜூனன்}, இரவில் விற்பயிற்சி செய்யத் தீர்மானித்தான்.  


இரவில் வில்லிலிருந்து புறப்படும் நாணொலியைக் கேட்ட துரோணர், அவனிடம் வந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டு, "நான் உண்மையில் சொல்கிறேன். நான் உனக்கு கற்பிக்கும் வித்தையால் உனக்கு நிகரான வில்லாளி ஒருவனும் இவ்வுலகத்தில் இருக்க மாட்டான்." என்றார்.


Abridged from  முழு மஹாபாரதம்  

to be continued in part  2 of 4

Saturday, September 2, 2017

BEFORE AND AFTER I AM 71 [2016]

Life is different for everyone. It is a riddle which none can fiddle. The success or failure depends on the decisions taken during critical times. I have taken decisions according to my knowledge. I am reasonably successful. Now I have lived my life for 74 years. We joined our son in 2016 when I was 71. I wish to tell you how I lived prior to and after I am 71.

BEFORE:

1. I was living in my house in Chennai with my wife until Oct 2016.
2. I was strict in spending within the returns on my investments.
3. I wrote accounts daily to control the expenses within the income
4. I never took any hand loan from anyone.
5. Food, clothing was need-based. I had no debit/credit card or I-phone. 
6. I had written my Will apportioning to my children after my wife.
7. I had covered medical insurance for 10 lacs each since 2004.
8. My mother is my God. I visited temples only on special days.
9. I was friendly with my siblings, their children, and friends.
10. I had no belief in spiritualism without renunciation. [Eg.Paramacharya]
11. I spent my days reading books, listening to music, browsing the Internet and walking.

AFTER:

1. I am living at Hyderabad with my son, DIL, and granddaughter. 
2. We visit our daughter in the US once in two years for six months.
3. I do not spend money nor write accounts as all our expenses are met by my son.
4. My investments are growing. I meet my sundry expenses on medicine, books, etc
5. Food and clothing are still need-based. I have no debit/credit card or I-phone.
6. I credit my son a reasonable sum periodically towards our maintenance expenses.
7. I apportion the rent from my house equally among my children.
8. I lead a 60% detached and 40% attached life.
9. I never go out of the house except for walking. I do not interact with others.
10. My DIL runs an artificial jewelry shop. We help her to our maximum. 
11. I spend my time reading books, listening to music, browsing the Internet, and walking.